சுவையான Banana Bread Ball - ரொம்ப ஈஸியா செய்யலாம்
சுவையான வாழைப்பழ பிரெட் பால் எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம் -
தேவையான பொருட்கள் -
பிரெட் - 3 துண்டுகள்
வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு
அரிசு மாவு - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை -
3 பிரெட் துண்டகளை எடுத்து அதை மிக்ஸியில் போட்டு இரண்டு, மூன்று சுற்று சுழற்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அதே மிக்ஸியில் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை போட்டு, அதில் 4 டேபிள் ஸ்பூன் வெல்லமோ அல்லது நாட்டுச் சர்க்கரையோ சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்த பிரெட்டில், இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு, அதில் 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து, அதில் கொஞ்சம் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி, அதில் 5 முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை, பிரெட் கலவையில் சேர்த்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், மிதமான சூட்டில் இந்த பிரெட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி எண்ணெய்யிலும் போட்டு பொரித்தெடுக்கலாம். அப்படி இல்லையென்றால், குழி பணியார அடுப்பிலும், நெய் விட்டு பணியாரமாககூட செய்து சாப்பிடலாம்.
சூப்பரான, சுவையான வாழைப்பழ பிரெட் பால் ரெடி...