தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பாயாசம்.., எப்படி செய்வது?
இந்த சுவையான வாழைப்பழ பாயாசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பழுத்த வாழைப்பழம்- 2
- அக்ரூட் பருப்பு- ¼ கப்
- பாசுமதி அரிசி- ½ கப்
- பால்- 4 கப்
- வெல்லம்- ½ கப்
- நெய்- 2 ஸ்பூன்
- ஏலக்காய்- 5
- முந்திருப்பருப்பு- 10
- உலர் திராட்சை- 10
- குங்குமப்பூ- ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது வெல்லத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில், நெய் ஊற்றி, நறுக்கிய அக்ரூட் பருப்புகளை 2 நிமிடங்கள் லேசாக வறுக்கவும்.
பின் இதே வாணலியில், மசித்த வாழைப்பழங்களைச் சேர்த்து, மென்மையாகும் வரை 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
இதனையடுத்து வேகவைத்த அரிசியை இதில் சேர்த்து நன்கு கலந்து பால் ஊற்றி கிளற வேண்டும்.
இப்போது இதில் கரைத்துவைத்த வெல்லம் சேர்த்து கலந்து ஏலக்காய் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலக்கவும்.
5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொதிக்கவைத்து நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சைகளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இறுதியாக வறுத்த அக்ரூட் பருப்புகள் மற்றும் வறுத்த முந்திரி திராட்சைகளை பாயசத்தில் சேர்த்து சூடாக பரிமாறினால் சுவையான வாழைப்பழ பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |