வாழைப்பழ தோலை கூட சாப்பிடலாமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா!
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்ததே.
ஆனால் நாம் தூக்கி குப்பையில் வீசும் வாழைப்பழ தோலில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த தோல்களில் பூஞ்சை எதிர்ப்பு கலவை, ஆண்டிபயாடிக், ஃபைபர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளது.
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது, இது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது, வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலையும் சாப்பிட்டு வந்தால் தூக்கத்தை தூண்டுகிறது.
அடிக்கடி கொஞ்சம் பாசிப்பயறு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
வாழைப்பழத் தோலைக் கொண்டு இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்குவதோடு, புதிதாக மருக்களும் உருவாகாமல் இருக்கும்.
வாழைப்பழ தோல்கள் உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகின்றன.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
வாழைப்பழ பழ தோல்கள் உங்கள் உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பச்சை வாழைப்பழ தோல்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.