பேங்காக் இசை விடுதியில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
பேங்காக்கில் உள்ள இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இசை விடுதியில் தீ விபத்து
பேங்காக்கின் வடக்கு பகுதியில் உள்ள சத்துசாக்-கில் அமைந்துள்ள ராங் பீர் லேட் பிராவ்(Rong Beer Na Lat Phrao) என்ற இசை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இந்த தீ விபத்தானது விடுதியின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனரில் ஏற்பட்ட மின்சகிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், பின்னர் தீப்பொறிகளும் புகையும் இடத்தை முழுவதுமாக சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இசை விடுதி விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிக்காக அதிக இளைஞர்கள் கூடும் இடமாக கருதப்படுகிறது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த சம்பவத்தில் ஏற்கனவே 30 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது வரை 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது விடுதியின் அவசர கால வழி அடைக்கப்பட்டிருந்ததா மற்றும் விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |