இறுதிப்போட்டியில் 117 ஓட்டங்களுக்கு சுருண்ட மே.தீவுகள்: தொடரை வென்று வங்காளதேசம் புதிய வரலாறு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று வங்காளதேசம் தொடரைக் கைப்பற்றியது.
ஹசன், சர்கார் கூட்டணி
வங்காளதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்தது. 
முதலில் ஆடிய வங்காளதேச அணியில் சைப் ஹசன் (Saif Hassan), சௌமியா சர்கார் (Soumya Sarkar) கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் குவித்தது.
சைப் ஹசன் 72 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, சௌமியா சர்கார் 86 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
தொடரை வென்ற வங்காளதேசம்
டௌஹித் ஹிரிடோய் 28 (44) ஓட்டங்களும், ஷாண்டோ 44 (55) ஓட்டங்களும் எடுக்க, வங்காளதேச அணி 296 ஓட்டங்கள் குவித்தது. அக்கீல் ஹொசைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 30.1 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அக்கீல் ஹொசைன் 15 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார். நசும் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இப்போட்டியில் 14 சிக்ஸர்கள் அடித்ததே வங்காளதேச அணி ஒருநாள் போட்டியில் அடித்த அதிக சிக்ஸர்கள் ஆகும்.
Bangladesh take the ODI series 2-1 after registering their second-highest ODI victory margin ever #BANvWI
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 23, 2025
Scorecard: https://t.co/CTa1OXiKV5 pic.twitter.com/qTmk51zls7
Champions! 🇧🇩🏆Bangladesh win the Dutch-Bangla Bank ODI Series 2–1 against the West Indies.#Bangladesh #TheTigers #BCB #Cricket #BANvWI #TigersForever #BANvWI2025 #HomeSeries #WhiteBall #WhiteBallSeries #WestIndies pic.twitter.com/wKa3vv9ZDm
— Bangladesh Cricket (@BCBtigers) October 23, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |