வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை: பிரபல ஆசிய நாடு அறிவிப்பு
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களுக்கு பங்களாதேஷ் அரசு தடை விதித்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு தடை
தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்-டாக் உள்ளிட்ட பிரபல சமூக ஊடக தளங்களுக்கு பங்களாதேஷ் அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
ஆகஸ்ட் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த முடிவு, நாட்டில் பேச்சு சுதந்திரம் குறித்த பரவலான விமர்சனங்கள் மற்றும் கவலைகளை எழுப்பியுள்ளது.
BREAKING:
— Globe Eye News (@GlobeEyeNews) August 2, 2024
Bangladesh bans Instagram, TikTok, WhatsApp, and YouTube in the country. pic.twitter.com/v2T47KR42L
அரசு வேலைகளில் கோட்டா சீர்திருத்தங்கள் குறித்த வன்முறை போராட்டங்களை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் இருந்து மொபைல் நெட்வொர்க்கள் வழியாக மெட்டாவின் இயங்குதளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அறிக்கைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
போராட்டங்களின் போது விதிக்கப்பட்ட முழு அளவு தடைக்கு மாற்றாக, தற்போது மொபைல் டேட்டா இணைப்புகளுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வியாழக்கிழமை இரவு நாட்டின் இணைய சேவை வேகம் இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், மனித உரிமை குழுக்கள் மற்றும் டிஜிட்டல் உரிமை ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |