217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! அயர்லாந்தை சம்பவம் செய்த வங்காளதேசம்
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
509 ஓட்டங்கள் இலக்கு
டாக்காவில் வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது.
வங்காளதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 476 ஓட்டங்களும், அயர்லாந்து 265 ஓட்டங்களும் எடுத்தன. 
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 509 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் ஹாரி டெக்டர் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
இமாலய வெற்றி
ஆனாலும் டைஜூல் இஸ்லாம், ஹசன் முராத் ஆகியோரின் அபார பந்துவீச்சில் அயர்லாந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 291 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அயர்லாந்து அணி ஆல்அவுட் ஆக, வங்காளதேசம் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கர்டிஸ் கேம்பர் (Curtis Campher) ஆட்டமிழக்காமல் 259 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். 
வங்காளதேசம் தரப்பில் டைஜூல் இஸ்லாம் (Taijul Islam), ஹசன் முராத் (Hasan Murad) ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், காலித் மற்றும் மெஹித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |