பாகிஸ்தானை தரைமட்டமாக்கிய வங்காளதேச அணி! மகளிர் உலகக்கிண்ணத்தில் இமாலய வெற்றி
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் மோதிய போட்டி நேற்று கொழும்பில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் மருஃபா அக்தர் ஓவரில், ஒமைமா சோஹைல் மற்றும் சிட்ரா அமின் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக்அவுட் ஆகினர்.
முனீபா அலி 17 ஓட்டங்களிலும், ரமீன் ஷமிம் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீராங்கனைகளும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 38,3 ஓவரிலில் 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. சோமா அக்தர் 3 விக்கெட்டுகளும், மருஃபா அக்தர் மற்றும் நஹிதா அக்தர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 31.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரூபியா ஹைதர் (Rubya Haider) ஆட்டமிழக்காமல் 54 (77) ஓட்டங்களும், சோபனா மோஸ்தரி 24 (19) ஓட்டங்களும் எடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |