வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்திய வங்காளதேச அணி! 101 ரன் வித்தியாசத்தில் விஸ்வரூப வெற்றி
ஜமைக்காவில் நடந்த டெஸ்டில் வங்காளதேச அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
ஜாகர் அலி அரைசதம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்தது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 164 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 146 ஓட்டங்களும் எடுத்தன.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேசம் 268 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஜாகர் அலி 106 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் விளாசினார்.
அல்சரி ஜோசப், கேமர் ரோச் அபாரம்
மேற்கிந்திய தீவுகளின் அல்சரி ஜோசப், கேமர் ரோச் தலா 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும், ஜஸ்டின் கிரேவ்ஸ் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 287 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டு 106 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் டைஜூல் இஸ்லாமின் மிரட்டல் பந்துவீச்சில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகள் பறிகொடுத்தது.
அபார வெற்றி
இதனால் அந்த அணி 185 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, வங்காளதேச அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 55 (75) ஓட்டங்களும், கிரேக் பிராத்வெயிட் 43 (63) ஓட்டங்களும் எடுத்தனர்.
டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளும், ஹஸன் மஹ்முத், டஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |