இந்தியாவுடனான எல்லையை மூடிய அண்டை நாடு!
கொரோனா தொற்று கொடூரமாக அதிகரித்துவருவதால் இந்தியாவுடனான எல்லையை வங்கதேசம் மூடியது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால், தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக பிரித்தானியா, ஜேர்மனி, ஈரான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் என பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.
இன்று முதல் அடுத்த 2 வாரங்களுக்கு (14 நாடுகள்) எல்லையை மூடப்படுகிறது.
அதே சமயம் இரு நாடுகளுக்கிடையில் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் போக்குவரத்து அனுமதி வழங்கப்படும் என்று வங்கதேசத்தின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு கடந்த 14-ஆம் திகதி வங்கதேச அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.