வங்கதேசத்தில் பதிவான நிலநடுக்கம்: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
வங்கதேச நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் நிலநடுக்கம்
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு நேற்று காலை 10.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அத்துடன் மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பாக சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

முதற்கட்ட தகவலின் படி 4 பேர் வரை உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்திய தகவலின் படி, நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 4 பேர் டாக்காவிலும், 5 பேர் நர்சிங்டி பகுதியிலும், நாராயண்கஞ்ச் பகுதியில் ஒருவரும் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |