சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம் காட்டும் இந்தியாவின் அண்டை நாடு
Bangladesh eyes Pakistan-Saudi-Turkey defence alliance: மூன்று நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு கூட்டணியில் இணைய வங்காளதேசம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம்
வங்காளதேச பிரதமரின் முக்கிய ஆலோசகர் ஒருவர், அந்த நாடு சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இணைந்து உருவாக்கும் பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.

ஆலோசகர் கூறியதாவது.,
வங்காளதேசம் தனது இராணுவ திறனை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பில் பங்களிக்கவும் விரும்புகிறது. இதற்காக, சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டணியில் வங்காளதேசம் இணைந்தால், அது தெற்கு ஆசியாவின் பாதுகாப்பு சமநிலையை மாற்றக்கூடும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், இது இந்தியா மற்றும் சீனாவுடன் வங்காளதேசத்தின் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
வங்காளதேசம் தற்போது தனது பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம், அந்த நாடு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்காற்றும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |