நடு ஆற்றில் கொளுந்துவிட்டு எரிந்த 500 பேர் பயணித்த படகு! பலி எண்ணிக்கை உயர்வு
வங்கதேசத்தில் நடு ஆற்றில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் பலியனோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
3 அடுக்கு படகு, வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து பர்குனாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த போது Jhalakathi நகரத்திற்கு அருகே நடு ஆற்றில் தீ பிடித்து எரிந்துள்ளது.
தீ விபத்திலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து பலர் மூழ்கியுள்ளனர். குறித்த படகில் கிட்டதட்ட 500 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் தற்போது வரை 37 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் பலருக்கு கடுமையான தீ காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
படகின் இன்ஜின் அறையில் முதலில் தீ ஏற்பட்டதாகவும், பின் மற்ற இடங்களுககு பரவியதாக தீயணைப்பு துறை அதிகாரி கமல் தெரிவித்துள்ளார்.
32 dead in #Bangladesh ferry fire, 100 others injured. boat caught fire in a river in Jhalokati state in Bangladesh, about 200 kilometers south of #Dhaka pic.twitter.com/zqtkfa5AnA
— Sandeep Seth (@sandipseth) December 24, 2021
பல மணிநேரம்கப்பல் தீ பற்றி எரிந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்ததாக விபத்தில் உயர் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.