பங்களாதேஷில் பயங்கர தீ வெடிப்பு விபத்து: பல மடங்கு அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
பங்களாதேஷின் சிட்டகாங் நகருக்கு அருகில் உள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் மிகப்பெரிய வெடிப்பு விபத்தில் குறைந்தபட்சமாக 49 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிட்டகாங் நகருக்கு அருகில் உள்ள சீதகுண்டா சேமிப்பு கிடங்கில் சனிக்கிழமை நேரப்படி 21:00 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சேமிப்பு கிடங்கில் இருந்த கொள்கலன்களில் இராசயனங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கருத்தப்பட்ட நிலையில், தீ விபத்தினை தொடர்ந்து தீடீரென மிகப்பெரிய வெடிப்பு விபத்து ஏற்பட்டது.
Hundreds of people were injured in the massive fire that ripped through a container depot in Sitakunda, Bangladesh. pic.twitter.com/IEf1lkehAC
— DW News (@dwnews) June 5, 2022
இந்த எதிர்பாரத தீடீர் வெடிப்பு விபத்தினால் தீயிணை அணைக்க முயன்றகொண்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல மீட்புப் பணியாளர்கள் காற்றில் தூக்கி எறியப்பட்டனர் மற்றும் வெடிப்பு மிகப் பெரியதாக இருந்ததால் அரை கிலோ மீட்டர்கள் வரை குப்பைகள் தூக்கி எறியப்பட்டதுடன், அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின.
இந்தநிலையில், இந்த வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் தீ பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இன்னும் காணவில்லை.
மேலும் இதுவரை தெரிவந்துள்ள தகவலின் படி, இந்த கோர விபத்தில் 49 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய இராணுவ வீரரின் தந்தைக்கு புடின் நிர்வாகம் கொலை மிரட்டல்: அம்பலமாகும் பின்னணி
அத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக அந்தப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர், இரத்த தானம் செய்வதற்கு மருத்துவர்கள் பொதுவெளியில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மற்றும் காயமடைந்தவர்களில் சிலர் தலைநகர் டாக்காவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.