India Vs Bangladesh T20: இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குவாலியரில் உள்ள மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்கதேச அணி 19.5 ஓவரில் 127 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலா 29 ஓட்டங்கள் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி வரும் 9ம் திகதி டெல்லியில் நடக்கிறது.
வின்னிங் சிக்ஸர் அடித்த ஹர்திக் பாண்டியா
12-வது ஓவரின் 5-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார். நிதிஷ்குமார் ரெட்டி 15 ஓட்டங்கள் எடுத்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு ஹர்திக் - நிதிஷ் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து 24 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேசம் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஒரு பேட்ஸ்மேன் ரன் அவுட்டும் இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |