587 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்! அயர்லாந்தை நொறுக்கிய வங்காளதேசம்
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி 587 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
மஹ்முதுல், ஷாண்டோ சதம்
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான சில்ஹெட்டில் நடந்து வருகிறது. 
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பால் நாடு திரும்ப கேட்ட வீரர்கள்! மறுத்து விளையாடக் கூறிய இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்
அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஸ்டிர்லிங் 60 ஓட்டங்களும், கேர்மைக்கேல் 59 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணியில் ஷத்மான் இஸ்லாம் 80 ஓட்டங்களிலும், மொமினுள் 82 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் (Mahmudul Hasan Joy) 171 ஓட்டங்கள் குவித்து வெளியேற, அணித்தலைவர் ஷாண்டோ 100 (114) ஓட்டங்கள் விளாசினார்.
வங்காளதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 587 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேத்யூ ஹும்ப்ரேஸ் 5 விக்கெட்டுகளும், பேர்ரி மெக்கர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |