உலக கோப்பை தொடரில் அபாயகரமான அணியாக இருப்போம்! வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் சூளுரை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எங்கள் அணியும் அபாயகரமான அணிதான் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்
ஆசிய கோப்பை தொடரில் நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை சேர்த்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் 2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கு பின் வங்கதேச அணி இந்தியாவை மீண்டும் ஆசியக் கோப்பை தொடரில் வீழ்த்தியுள்ளது.
அபாயகரமான அணியாக இருப்போம்
இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாம் நிலை இந்திய அணி விளையாடி இருந்தாலும், திலக் வர்மாவை தவிர மற்ற அனைத்து வீரர்களும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், வங்கதேச அணிக்காக அதிகம் விளையாடிடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கி இருக்கிறோம்.
நிறைய வீரர்களின் காயம், சில வீரர்களின் சொந்த காரணங்களால் விலகல் போன்றவை ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்ததற்கான முக்கிய காரணங்கள்.
ஆனால் நாங்கள் சிறந்த அணியை தற்போது கண்டறிந்துள்ளோம், அடுத்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாங்களும் அபாயகரமான அணிக்காக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |