இங்கிலாந்து வங்கி முக்கிய முடிவு.. 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதம் குறைப்பு
இங்கிலாந்து வங்கி (Bank Of England) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
வியாழன் அன்று, முக்கிய வட்டி விகிதத்தை (main interest rate) 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைக்க முடிவு செய்தது.
பணவீக்க அழுத்தங்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதால், இங்கிலாந்து வங்கி, பண மதிப்பீட்டில் வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட Monetary Policy Committee வட்டி விகிதங்களை 5-4 என்ற வித்தியாசத்தில் குறைக்க ஒப்புக்கொண்டது.
மேலும், borrowing costs ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கோவிட்-19 இன் தாக்கம் காரணமாக 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு இங்கிலாந்து வங்கி முக்கிய வட்டி விகிதங்களைக் குறைப்பது இதுவே முதல் முறை.
வங்கி கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி (Andrew Bailey) வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய வட்டி விகிதம் ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டாலும், இங்கிலாந்து வங்கியின் Monetary Policy Committee (MPC) தொடர்ந்து முன்ன்னேறிச் செல்லும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்து வங்கி ஆண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கிறது.
ஆனால் 2001-ஆம் ஆண்டில் பண மதிப்பை இறுக்கிய இங்கிலாந்து வங்கி, அதன் பிறகு மாறவில்லை. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற BOE பண மதிப்பாய்வில், வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்று 7-2 வித்தியாசத்தில் முடிவு செய்யப்பட்டது.
2022 அக்டோபரில் பிரித்தானியாவின் பணவீக்கம் 11.1 சதவீதமாக இருந்தது. இது 41 ஆண்டுகளில் இல்லாத அளவிக்ரு அதிகம்.
அனால், கடந்த மே மாதம் பணவீக்கம் இரண்டு சதவீதமாக குறைந்துள்ளது.
அக்டோபர் 30-ஆம் திகதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பொதுத்துறை ஊதியங்கள் மற்றும் பணவியல் கொள்கை குறித்த பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து வங்கியின் பண மதிப்பாய்வுக் குழு நிலைமையை மதிப்பாய்வு செய்யும் என்று தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Andrew Bailey, Bank Of England, Bank Of England rate of interest, Bank Of England Key interst rates