மனைவி மற்றும் மகனுடன் விமான விபத்தில் சிக்கி பலியான பெரும் வங்கி நிறுவனர்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் நிறுவனர்களில் ஒருவரான தொழிலதிபர் தமது மனைவி மற்றும் மகனுடன் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பலியான தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா பாலைவனத்தில்
நைஜீரியாவின் Access வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்துள்ள 57 வயது Herbert Wigwe என்பவரே கலிபோர்னியா பாலைவனத்தில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
@twitter
அந்த ஹெலிகொப்டரில் பயணித்த 6 பேர்களும் பலியானதாகவே தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் Mojave பாலைவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி கடந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானிகள் உட்பட 6 பேர்கள்
இந்த விபத்தில் Herbert Wigwe அவரது மனைவி மற்றும் மகன், இரு விமானிகள் உட்பட 6 பேர்கள் பலியாகியுள்ளனர். Herbert Wigwe மரணமடைந்துள்ள தகவல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
@reuters
நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என்றே நைஜீரிய ஜனாதிபதி மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த நேரம் மழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |