6 மாதங்கள் முதல் 1 வருட Fixed Deposit -க்கு.., அதிக வட்டி தரும் வங்கிகள் எவை தெரியுமா?
ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் வங்கிகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Fixed Deposit முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குவதால் இந்தத் திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர்.
இதில் நீண்டகால FDகளில் (Long term FD) பணமானது பல வருடங்களுக்கு Lock செய்யப்பட்டிருக்கும். ஆனால், குறுகிய கால (Short term FD) களில் நெகிழ்வுத் தன்மை மற்றும் பணப்புழக்கம் உட்பட பல நன்மைகள் உள்ளன.
குறுகிய கால FDகளில் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை withdraw செய்துகொள்ளலாம். திட்டமிடப்பட்ட செலவுகள், அவசர கால சூழ்நிலைகள் அல்லது முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
Short term FD Account -யை திறப்பதற்கு குறைவான ஆவணங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக இதில் முதலீடு செய்வதும் எளிமையானது.
மேலும், குறைந்த வரி பிரிவில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த Short term FD பெரிய அளவில் உதவுகிறது. இதில் பெறப்படும் வட்டியானது முதலீட்டாளரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதற்கு தகுந்த வரி வசூல் செய்யப்படுகிறது.
வங்கிகள் பட்டியல்
தற்போது நாம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை கீழே பார்க்கலாம்.
* பேங்க் ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda Bank) - 5.60% முதல் 7.10% வரை
* பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) - 5.5% முதல் 5.75% வரை
*பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra) - 5.10% முதல் 6% வரை
* கனரா வங்கி (Canara Bank) - 6.15% முதல் 6.25% வரை
*சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) - 6.0% முதல் 6.25% வரை
* இந்தியன் வங்கி (Indian Bank) - 3.85% முதல் 7.05% வரை
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) - 5.75%
* பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி (Punjab and Sind Bank) - 5.25% முதல் 7.10% வரை
* பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank) - 6% முதல் 7.05% வரை
* ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) - 5.75% முதல் 6% வரை
* UCO வங்கி (UCO Bank) - 5% முதல் 5.50% வரை
* யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) - 4.90% முதல் 5.75% வரை
* ஆக்சிஸ் வங்கி (Axis Bank) - 5.75% முதல் 6% வரை
* பந்தன் பேங்க் லிமிடெட் (Bandhan Bank Limited) - 4.50%
* சிட்டி யூனியன் பேங்க் லிமிடெட் (City Union Bank Limited) - 6% முதல் 6.5% வரை
* ஃபெடரல் பேங்க் லிமிடெட் (Federal Bank Limited) - 5% முதல் 6% வரை
* HDFC பேங்க் லிமிடெட் (HDFC Bank Limited) - 4.5% முதல் 6% வரை
* ICICI பேங்க் லிமிடெட் (ICICI Bank Limited) - 4.75% முதல் 6% வரை
* IDBI பேங்க் லிமிடெட் (IDBI Bank Limited) - 5.25% முதல் 7.05% வரை
*Induslnd பேங்க் லிமிடெட் (Induslnd Bank Limited) - 5% முதல் 6.50% வரை
* IDFC ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட் (IDFC First Bank Limited) - 4.5% முதல் 5.75% வரை
* கர்நாடகா பேங்க் லிமிடெட் (Karnataka Bank Limited) - 6.0% முதல் 6.5% வரை
* கோடக் மகேந்திரா வங்கி (Kotak Mahindra Bank) - 6% முதல் 7% வரை
* யெஸ் வங்கி (Yes Bank) - 5% முதல் 6.35%.வரை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |