ரூ.2 லட்சம் வரை Loan கொடுக்கும் இந்திய அரசு.. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
சுயதொழில் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்காக இந்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு செப்டம்பர் 17, 2023 அன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை (PM Vishwakarma Yojana) அறிமுகப்படுத்தியது.
PM Vishwakarma Yojana
இந்தியாவில் உள்ள கைவினைக் கலைஞர்களின் நிலையை உயர்த்துவது தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்த்தின் முக்கிய நோக்கமாகும்.
கைவினைத் தொழிலை குடும்ப தொழிலாக செய்து வருபவர்கள் மற்றும் சுய தொழிலாக ஏற்று நடத்தி வரக்கூடிய 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
பொற்கொல்லர், கல் தச்சர்கள், காலணி செய்பவர், காலணி தைப்பவர், குயவர், தச்சர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர், கொத்தனார், கயிறு செய்பவர், டெய்லர், சலவைத் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர் உட்பட 18 வகையான தொழில்ககளை செய்பவர்கள் இதில் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் சான்றிதழ் மற்றும் ஐடி கார்டு போன்றவை வழங்கப்படுவதோடு அங்கீகாரம் அளிக்கப்படும்.
தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.15000 திறன் மதிப்பீடு செய்த பிறகு வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறுபவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை அடிப்படை திறன் பயிற்சி வழங்கப்படும். அதன்படி, ஒரு நாளைக்கு ரூ.500 ரூபாய் Stipend தொகை வழங்கப்படும்.
இந்த பயிற்சிக்கு பிறகு 15 நாட்கள் மேம்படுத்தப்பட்ட பயிற்சி கொடுக்கப்படும். இதற்கும் ரூ.500 ரூபாய் Stipend தொகை வழங்கப்படும்.
ரூ.2 லட்சம் வரை கடன்
அடிப்படை திறன் பயிற்சியை முடித்த கைவினை கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனை செலுத்த வேண்டிய கால அளவு 18 மாதங்கள் ஆகும்.
அதன் பிறகு மேம்படுத்தப்பட்ட பயிற்சியை முடித்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான கடன் கொடுக்கப்படும். இருந்தாலும் முதலில் ரூ.1 லட்சம் கடனை திருப்பி செலுத்திய பிறகு தான் ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும்.
அதோடு தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 100 Digital Transactions வீதம் ஒவ்வொரு Transactions -க்கும் 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எப்படி பதிவு செய்வது?
* முதலில் பிரதமரின் விஸ்வகர்மா https://pmvishwakarma.gov.in/Home/HowToRegister என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
* அதில் உங்களுடைய மொபைல் எண் மற்றும் ஆதார் எண் Verification -யை நிறைவு செய்ய வேண்டும்.
* அடுத்து பதிவு படிவத்திற்கு விண்ணப்பித்து பிரதமரின் விஸ்வகர்மா Digital ID மற்றும் சான்றிதழை பதிவிறக்கம் (Download) செய்யவும்.
* மேலும், பிரதமரின் விஸ்வகர்மா இணையதளத்தின் ஆதார் அடிப்படையிலான Biometric authentication யை பொது சேவை மையங்களில் செய்து முடிக்கலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் 18002677777 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது pm-vishwakarma@dcmsme.gov.in என்ற மின்னஞ்சலில் இமெயில் அனுப்பலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |