Home Loan EMI செலுத்தாமல் இருந்தால்.. எத்தனை நாட்கள் கழித்து வீடு ஏலம் விடப்படும்?
வீட்டுக் கடனின் EMI -யை நீங்கள் செலுத்த தவறும் பட்சத்தில் வங்கிகள் உங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான RBI-இன் பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
சொந்த வீடுகள் கட்டுவது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஒரு பேராசையாகவே இருக்கும். ஆனால், நாம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதை செலுத்துவதற்கு நாம் வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், சொந்த வீடு கட்டுவது மிடில் கிளாஸ் மக்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. ஆனால், சிலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர்.
நீங்கள் வாங்கும் கடனின் தொகையை பொருத்து 20 முதல் 30 ஆண்டுகள் வரை கூட தவணை நீட்டிக்கப்படலாம்.
ஆனால், நீண்ட காலம் என்பதால் வேலையின்மை, உடல்நிலை காரணத்தால் உங்களது EMI செலுத்த முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் வங்கிகள் உங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான RBI-இன் பாதுகாப்பு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
வாரா கடன்
உங்களது EMI தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு நிதி நிறுவனத்திற்கோ அல்லது வங்கிகளுக்கோ செலுத்தத் தவறினால் வங்கிகள் உங்களது பெயரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கும்.
நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு EMI செலுத்த தவறி அபராதத்துடன் செலுத்தினால் தவறில்லை. ஆனால், மூன்று மாத EMI தவறவிட்டால், வீட்டுக் கடன் அவர்களின் ஆவணங்களில் செயல்படாத சொத்து (NPA) எனக் குறிப்பிடப்படும்.
இந்த நேரத்தில் சில வங்கிகள் 90 நாட்கள் அவகாசம் கொடுக்கின்றன. அப்போது நீங்கள் அபராதத்துடன் செலுத்தினால் எந்தவொரு பிரச்னையும் இல்லை.
Home Loan கட்டாமல் இருந்தால் ஏற்படும் விளைவு
உங்களது வீட்டுக் கடனுக்கான EMI தொகையை செலுத்த தவறினால் கிரெடிட் ஸ்கோர் (Credit score) குறையும். இதனால், எதிர்காலத்தில் கடன் வாங்க நினைத்தால் சிக்கல் ஏற்படும்.
கடனை செலுத்த தவறும் போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். 2002 -ம் ஆண்டின், SARFAESI சட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை திரும்பப் பெற கடன் பெற்றவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடலாம்.
அதாவது, கடன் வழங்குபவர்கள் செயல்படாத சொத்துக்களை கையாள்வதற்கு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியானது வீட்டுக் கடன் செலுத்தாத சமயங்களில் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றன.
கடன் வழங்குபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கடன் வாங்கியவருக்கு அறிவிப்பை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
மேலும், கடனை அவர்கள் திருப்ப செலுத்த முடியாத பட்சத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தொந்தரவு செய்வது, அடிப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது.
மேலும், கடன் வழங்கியவர்கள் 30 முதல் 60 நாட்கள் வரை கால அவகாசம் தராமல் கடன் பெற்றவரின் சொத்துக்களை கையகப்படுத்துதலோ, ஏலமோ (Auction) விடக்கூடாது.
இதுவே, வங்கிகள் கொடுத்த கால அவகாசத்தையும் மீறி கடனை செலுத்தவில்லை என்றால் கடன் தந்த நிறுவனங்கள் உங்களுடைய சொத்துகளை, ஏலம் விடக் கூடும். உங்களது நிலுவை தொகையை விட ஏலம் தொகை அதிகமாக இருந்தால் மீதி தொகையை நீங்கள் பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |