திரைத்துறையின் உயரிய விருதை வென்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா! குவியும் வாழ்த்துக்கள்
Emmy விருதை வென்ற இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார்
பராக் ஒபாமா இரண்டு முறை Grammy விருதுகளை வென்றவர்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எம்மி விருதை வென்றுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர் பராக் ஒபாமா.
அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒபாமா 8 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். அரசியல் மட்டுமன்றி இசை, விளையாட்டு என பல துறைகளில் ஈடுபாடும், திறமையும் கொண்டவர் ஒபாமா.
PC: PABLO MARTINEZ MONSIVAIS/AP
அவர் Our Great National Parks என்ற ஆவணத் தொடரில் இடம்பெற்ற காட்சிகளுக்கு பின்னணி விளக்கக் குரல் கொடுத்திருந்தார். அதற்காக அவருக்கு தற்போது திரைத்துறையின் உயரிய விருதான Emmy Award வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த விருதை வென்ற இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார். இதற்கு முன்பு டுவைட் ஐசனோவர் Emmy விருதை வென்றிருந்தார்.
Congrats to President Barack Obama who just became the first President to win a competitive Emmy for narrating Our Great National Parks pic.twitter.com/v86JNsyDGD
— Netflix (@netflix) September 4, 2022