போல் வால்ட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் - சாதித்த தமிழ்நாட்டின் பரணிகா

Tamil nadu India Mayiladuthurai
By Karthikraja Sep 25, 2026 02:02 PM GMT
Report

tamilnadu baranica elangovan wins bronze at pole vault at asian games: ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாட்டின் பரணிகா இளங்கோவன் போல் வால்ட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

போல் வால்ட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான Pole Vault (கம்பூன்றித் தாண்டும்) பிரிவில் ஆசிய போட்டிகளில் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 

போல் வால்ட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் - சாதித்த தமிழ்நாட்டின் பரணிகா | Baranica Elangovan Wins Bronze At Pole Vault

தமிழ்நாட்டை சேர்ந்த பரணிகா இளங்கோவன், இறுதிப் போட்டியில் 4.15 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவருடன் கஜகஸ்தானின் போலினா இவனோவாவும் 4.15 மீட்டர் என்ற சிறந்த உயரத்தை தாண்டி, வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

ஜப்பானின் மிசாக்கி மொரோட்டா 4.55 மீட்டர் தூரத்துடன் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் சுங்கே நியூ 4.50 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

பரணிகா இளங்கோவன்

29 வயதான பரணிகா இளங்கோவன், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவரது தந்தை இளங்கோவன் ஒரு விவசாயி ஆவார்.

ஆரம்பத்தில், நீளம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற அவர், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு சென்ற அவர், எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே கம்பூன்றித் தாண்டும் போட்டிக்கு மாறினார். 

போல் வால்ட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் - சாதித்த தமிழ்நாட்டின் பரணிகா | Baranica Elangovan Wins Bronze At Pole Vault

கல்லூரியை முடித்தபோது, ​​2.60 மீட்டர் உயரம் தாண்டி கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு பதக்கத்தை வென்றிருந்தார்.

2019 ஆம் ஆண்டில், போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட காயத்தால் இடது காலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு வருடத்தில் காயத்திலிருந்து முழுமையாக மீண்ட அவர், 2021 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் 3.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

அதன் பின்னர், மார்ச் 15 அன்று, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய திறந்தநிலை தாண்டுதல் போட்டியில், பரானிகா 4.10 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றதோடு, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய தடகள கூட்டமைப்பின் தகுதி அளவுகோலையும் கடந்தார்.

அடுத்த 9 நாட்களில், புவனேஸ்வரில் நடைபெற்ற முதல் தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் , பெண்களுக்கான கம்பூன்றித் தாண்டும் போட்டியின் இறுதிச் சுற்றில், 4.22 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனையை முறியடித்தார்.

போல் வால்ட் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் - சாதித்த தமிழ்நாட்டின் பரணிகா | Baranica Elangovan Wins Bronze At Pole Vault

அதைத்தொடர்ந்து கடந்த மே மாதத்தில், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற முதல் இந்திய உள்ளரங்க திறந்தநிலை ஒருங்கிணைந்த போட்டிகள் மற்றும் கோல் தாண்டுதல் போட்டியில், 4.23 மீட்டர் உயரம் தாண்டி தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US