மெஸ்ஸி இல்லாமல் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பார்சிலோனா!
லா லிகா தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி, தனது 27வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லா லிகா தொடர்
பார்சிலோனா மற்றும் எஸ்பானியோல் அணிகள் மோதிய லா லிகா போட்டி Cornellaa-El Prat மைதானத்தில் நடந்தது. ஆட்டத்தின் 11 மற்றும் 40வது நிமிடங்களில் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி கோல்கள் அடித்தார்.
@FCBarcelona (Twitter)
அலெஜாண்ட்ரா 20வது நிமிடத்தில் கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் ஜூல்ஸ் கௌண்டே 53வது கோல் அடித்தார். எஸ்பானியோல் அணி 73 மற்றும் 90 + 2 நிமிடங்களில் இரண்டு கோல்கள் மட்டுமே அடித்ததால், பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது.
@FCBarcelona (Twitter)
மெஸ்ஸி இல்லாமல் முதல் சாம்பியன் பட்டம்
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 27வது லா லிகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிலும் குறிப்பாக மெஸ்ஸி இல்லாமல் முதல் முறையாக பார்சிலோனா சாம்பியன் ஆகியுள்ளது.
@FCBarcelona (Twitter)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
@FCBarcelona (Twitter)
FULL TIME!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! FC BARCELONA, 2022-23 LA LIGA CHAMPIONS! pic.twitter.com/Jho1kitzyd
— FC Barcelona (@FCBarcelona) May 14, 2023