கடைசி பந்தில் விக்கெட்! அணியை காப்பாற்றிய கேப்டன்..பிக் பாஷ் லீக்கில் அபார வெற்றி
பிக் பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸை வீழ்த்தியது.
மேக்ஸ் பிரையண்ட் சரவெடி ஆட்டம்
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான போட்டி தி காபாவில் நடந்தது.
ரென்ஷா 22 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, மேக்ஸ் பிரையண்ட் (Max Bryant) அதிரடியில் மிரட்டினார்.
அவர் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாச, பிரிஸ்பேன் அணி 179 ஓட்டங்கள் குவித்தது. லுக் வுட், ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
கேப்டன் மேத்யூ ஷார்ட் ருத்ர தாண்டவம்
பின்னர் ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் ருத்ர தாண்டவம் ஆடினார். கிறிஸ் லின் 22 ஓட்டங்களிலும், மனேண்டி 24 (12) ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் (Matthew Short) அரைசதம் விளாசினார்.
பிரிஸ்பேன் அணித்தலைவர் சேவியர் பார்ட்லெட், வில்டர்மத் ஆகியோர் மிரட்டலான பந்துவீச்சில் அடிலெய்டின் விக்கெட்டுகள் சரிந்தன.
அணியின் ஸ்கோர் 156 ஆக உயர்ந்தபோது, ஷார்ட் 63 (39) ஓட்டங்களில் பார்ட்லெட் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

வாடியா 16 பந்துகள் 34 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி) விளாசிய நிலையில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹாரி நீல்சன் (7) வெளியேற, அடிலெய்டு அணி 172 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
துடுப்பாட்டத்தில் 15 ஓட்டங்களும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் எடுத்த பார்ட்லெட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |