இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்தில் இன்னொரு இழப்பு
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஏகப்பட்ட வெற்றி பாடல்களுக்கு வாசித்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் சசிதரன் காலமானார்.
தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசையை பிரபலத்திய சசிதரன், இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
தமிழ் சினிமா ரசிகர்களை இசைக்கடலில் நனைத்த ஏகப்பட்ட பாடல்களுக்கு இவரது பேஸ் கிட்டார் இசை பக்க பலமாக அமைந்தது. மேலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்களின் கச்சேரிகளிலும் சசிதரனின் பேஸ் கிட்டாரின் மேஜிக் களைகட்டும்.
சசிதரனின் திடீர் மரணம் இளையராஜாவின் இசைக் கலைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இசை ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் பேஸ் கிட்டாரிஸ்ட் கலைஞர் சசிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இழப்பால் இளையராஜா மிகவும் மனம் உடைந்து போயுள்ளதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துள்ளதாகவும் தகவல்