தரைத்தளம் முழுக்க சடலங்கள்: வெளிவரும் கொடூரமான காட்சிகள்
உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு அருகில் குடியிருப்பு வளாகம் ஒன்றின் தரைத்தளம் முழுவதும் சடலங்களால் நிரம்பியுள்ள கொடூரமான காட்சிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
துணை ராணுவமான வாக்னர் குழு
குறித்த காட்சியில் ரஷ்யாவின் தனியார் துணை ராணுவமான வாக்னர் குழுவின் முதன்மை அதிகாரி ஒருவர் தென்படுகிறார். தமது குழு உறுப்பினர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதை அவர் பார்வையிடுவதாகவே கூறப்படுகிறது.
dailystar
ரஷ்ய ஜனாதிபதி புடினின் தனிப்பட்ட துணை ராணுவம் என அறியப்படும் வாக்னர் குழு, உக்ரைனில் எந்த தாக்கத்தையும் உருவாக்காத நிலையில், பெரும் இழப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது.
சிரியாவில் வாக்னர் குழுவுடன் ரஷ்ய ராணுவம் ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு சதவீதம் கூட உக்ரைனில் வாக்னர் குழுவால் ஏற்படுத்த முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் வெற்றியும் உக்ரைனில் தடைபட்டுள்ளதாக கூறுகின்றனர்.
குவிக்கப்பட்டுள்ள சடலங்கள்
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் வாக்னர் குழு போராளிகளின் குவிக்கப்பட்டுள்ள சடலங்கள் என்றே உறுதியாகியுள்ளது. மேலும், ரஷ்ய நிர்வாகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எஞ்சிய வீரர்களுடன் அடுத்த வாரம் நாடு திரும்ப இருப்பதாகவும் வாக்னர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
dailystar
உக்ரைனில் கொல்லப்பட்டுள்ள வீரர்களின் சடலங்களை உரிய முறையில் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.