உயிர் தப்புவதற்காக ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்ற சிரியாவின் ஜனாதிபதி: பரபரப்பு தகவல்
சிரிய ஜனாதிபதியான பஷார் அல் அசாத், தான் உயிர் தப்புதற்காக, தங்கள் எதிரி நாடான இஸ்ரேலுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ ரகசியங்களை விற்ற சிரிய ஜனாதிபதி
தான் உயிர் தப்பி, பத்திரமாக சிரியாவை விட்டு வெளியேறுவதற்காக, சிரிய ஜனாதிபதியான பஷார் அல் அசாத், தனது நாட்டின் ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்றதாக கூறப்படுகிறது.
அப்படி சிரியாவில் எங்கெல்லாம் ராணுவ தளவாட சேமிப்பகங்கள் உள்ளனவோ, அது குறித்த தகவல்களை அசாத் இஸ்ரேலுக்கு விற்றதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் தற்போது அந்த ராணுவ தளவாட சேமிப்பகங்களை குறிவைத்து குண்டு வீசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டு ஊடகமான Hurriyet என்னும் செய்தித்தாளின் விமர்சகரான அப்துல்காதிர் செல்வி என்பவர், அசாத், சிரியாவில் ஆயுத தளவாட சேமிப்பகங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் போர் விமானங்கள் எங்கெங்கு உள்ளன என்பது குறித்த விவரங்களை இஸ்ரேலுக்குக் கொடுத்ததாக, நம்பத்தகுந்த ஒருவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு, தான் தப்பிச்செல்லும்போது தன் விமானத்தை இஸ்ரேல் தாக்காது என அசாத் இஸ்ரேலிடம் உத்தரவாதம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, சரியாக அசாத் நாட்டைவிட்டு வெளியேறியதும், இஸ்ரேல் சிரிய ராணுவ மையங்கள் மீது குண்டு வீசியதால், இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் அப்துல்காதிர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |