அவுஸ்திரேலிய முதியவரின் பிறப்புறுப்பில் சிக்கிக்கொண்ட 3 பட்டன் பேட்டரிகள்: மருத்துவர்கள் செய்தது என்ன?
அவுஸ்திரேலியாவில் ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பில் இருந்து 3 பட்டன் பேட்டரிகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
முதியவரின் விபரீதமான செயல்
அவுஸ்திரேலியாவில் அடையாளம் வெளியிடப்படாத 73வயது முதியவர் ஒருவர், ஆணுறுப்பில் 3 சிறிய பட்டன் பேட்டரிகள் சிக்கி கொண்ட பிரச்சனைக்காக அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையின் படி, சம்பந்தப்பட்ட நபர் தன்னுடைய பாலியல் துண்டலை பூர்த்தி செய்து கொள்வதற்காக சிறிய பேட்டரிகளை ஆணுறுப்புக்குள் நுழைத்துள்ளார்.
பல்வேறு பொருட்களை கொண்டு இது போன்ற செயலிகளை மாட்டிக் கொள்ளாமல் அடிக்கடி சம்பந்தப்பட்ட நபர் செய்து வந்த நிலையில், இந்த முறை பேட்டரியை அவரது பிறப்பு உறுப்பில் சிக்கிக் கொண்டுள்ளது.
சொந்தமாக தானே வெளியே எடுக்க முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்ததால், 24 மணி நேரத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளியே எடுக்கப்பட்ட பேட்டரி
நீண்ட முயற்சிகள் எடுத்தும் பேட்டரியை வெளியே எடுக்க முடியாமல் மருத்துவர்கள் போராடியுள்ளனர்.
கிட்டத்தட்ட பல மணி நேர போராட்டத்திற்கு இறுதியாக சம்பந்தப்பட்ட நபரின் ஆண் உறுப்பில் சிக்கி கொண்ட 3 சிறிய ரக பட்டன் பேட்டரிகளை ஃபோர்செப்ஸ்(forceps) உதவி கொண்டு வெளியே எடுத்துள்ளனர்.
சிகிச்சைகள் முடிந்து வெற்றிகரமாக பேட்டரிகள் வெளியே எடுக்கப்பட்டு இருந்தாலும், அவர் தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |