டி20யில் 8வது வீரராக அரைசதம் அடித்தவர்கள்: முதலிடத்தில் இலங்கை வீரர்.. யார் தெரியுமா?
டி20 கிரிக்கெட்டில் 8வது வீரராக களமிறங்கி அரைசதம் விளாசியவர்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
மிட்சேல் சான்ட்னர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நியூசிலாந்து அணித்தலைவர் மிட்சேல் சான்ட்னர் 8வது வீரராக களமிறங்கினார். 
அதிரடியில் மிரட்டிய அவர் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் சான்ட்னர் ஒரு சாதனை பட்டியலில் இணைந்தார்.
அதாவது, டி20 கிரிக்கெட்டில் 8வது வரிசையில் களமிறங்கி 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரரானார் சான்ட்னர்.
இப்பட்டியலில் இலங்கையின் இசுரு உதானா (Isuru Udana) முதலிடத்தில் உள்ளார். அவர் செஞ்சுரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான (2019யில்) போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் விளாசியிருந்தார். 
8வது வீரராக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்
- இசுரு உதானா - 84 ஓட்டங்கள் (2019)
- இஃப்திகார் அகமது - 60 ஓட்டங்கள் (2023)
- மிட்சேல் சான்ட்னர் - 55 ஓட்டங்கள் (2025)
- ரிஷாத் ஹொசைன் - 53 ஓட்டங்கள் (2024)
- ரிஷாத் ஹொசைன் - 52 ஓட்டங்கள் (2019)

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |