அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டதால் ’கரண்ட்’ உதவியுடன் உயிர்வாழும் பெண்
அபூர்வ நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் ஒருவர், மின்சாரம் அல்லது பேட்டரியின் உதவியுடன் உயிர் வாழ்ந்துவருகிறார்.
நாடித்துடிப்பே இல்லாமல் உயிர் வாழும் பெண்
அமெரிக்காவின் Boston நகரில் வாழும் சோபியா (Sofia Hart, 30), வீட்டிலிருக்கும்போது தன்னை மின்சாரத்துடன் பிளக் உதவியுடன் இணைத்துக்கொள்கிறார், வெளியே செல்லும்போது பேட்டரியுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார்.
Credit: SOFIA HART
சோபியா, irreversible dilated cardiomyopathy (IDC) என்னும் அபூர்வ இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பலவீனமாக இருக்கும் அவரது இதயம் எந்நேரமும் நின்றுவிடும் அபாயம் உள்ளதால், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும்.
Credit: SOFIA HART
ஆனால், இதயம் கிடைக்கவேண்டுமே! அதுவரை, left ventricular assist device (LVAD) என்னும் கருவியின் உதவியுடன் வாழ்ந்துவருகிறார் சோபியா. அந்தக் கருவி இயங்க மின்சாரம் தேவை, இரண்டு வலிமையான பேட்டரிகளுடன் இனைக்கப்படுள்ள அவரை, மின்சாரத்திலிருந்து பிரித்தால், அவர் உயிரிழக்க நேரிடலாம்.
Credit: Tiktok
நான் பேட்டரியில் இயங்குகிறேன், உண்மையாகவே எனக்கு நாடித்துடிப்பே கிடையாது என்கிறார் சோபியா.
Credit: Tiktok
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |