ரஷ்ய சூப்பர்மார்க்கெட்டில் சர்க்கரைக்கு அலைமோதும் மக்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யாவில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் சர்க்கரை வாங்க பொதுமக்கள் அலைமோதும் வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் விளையாக, ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
அதுமட்டுமின்றி ரஷ்யாவில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலைவாசி உச்சம் தொட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய சூப்பர்மார்க்கெட் ஒன்றில் மக்கள் சர்க்கரை வாங்க அலைமோதும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த வார இறுதியில் இருந்து, ரஷ்யாவில் சர்க்கரையின் விலை 12.8% உயர்ந்துள்ளது.
Battle for Sugar
— NEXTA (@nexta_tv) March 17, 2022
According to official data, since the end of last week, sugar has risen in price by 12.8% in #Russia. People, fearing an even greater rise in prices, began to buy it en masse. pic.twitter.com/3TOjwPsDTw
இன்னும் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள், சர்க்கரையை மொத்தமாக வாங்கத் தொடங்கியுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.