இலங்கையில் இன்று கரையைக் கடக்கும் காற்றழுத்தம்.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு இலங்கையில் கரையை கடக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணிநேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது, சென்னையின் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று பிற்பகல் அல்லது மாலையில் இலங்கையின் திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |