மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த கோல்! லிவர்பூலை நொறுக்கிய பாயெர்ன் முனிச் (வீடியோ)
கிளப் நட்புமுறை போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது.
பலப்பரீட்சை போட்டி
சிங்கப்பூர் தேசிய மைதானத்தில் நடந்த போட்டியில் பாயெர்ன் முனிச் - லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கோடி காக்போ (Cody Gakpo) கோல் அடித்தார். அதன் பின்னர் 28வது நிமிடத்தில் கார்னர் கிக்கில் வந்த பந்தை, லிவர்பூல் வீரர் விர்ஜில் வான் டிஜிக் தலையால் முட்டி கோலாக்கினார்.
An unforgettable first goal ?
— FC Bayern Munich (@FCBayernEN) August 2, 2023
Take a bow, Frans Krätzig ??#LFCFCB #AudiFCBTour pic.twitter.com/bvzB4HrYwb
இதற்கு பதிலடியாக பாயெர்ன் முனிச் வீரர் செர்கே ஞாப்ரே 33வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த 9 நிமிடங்களில் லெரோய் சனே அதிரடியாக கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதி 2-2 என சம நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் போட்டியில் அனல் பறந்தது.
Yong Teck Lim/Getty Images
இளம் வீரரின் மின்னல் கோல்
லிவர்பூலின் லூயிஸ் டையஸ் (66வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, பாயெர்ன் வீரர் ஜோஸிப் ஸ்டானிஸிக் 80வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றை அடித்தார்.
20 வயது இளம் வீரரான பிரன்ஸ் க்ரட்ஜிக் (90+1) உதைத்த பந்து மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து கோல் ஆனது. இதன்மூலம் பாயெர்ன் முனிச் அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
AFP
Yong Teck Lim/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |