கடைசி நிமிடத்தில் கோல் அடித்த எம்பாப்பே..PSG மிரட்டல் வெற்றி
PSG கேம்பஸில் நடந்த நட்புமுறை கிளப் போட்டியில் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நட்புமுறை கிளப் போட்டி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் Le Havre அணிகளுக்கு இடையிலான நட்புமுறை கிளப் கால்பந்து போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் PSG அணியின் ஹியூகோ எகிட்டிக்கே அபாரமாக கோல் அடித்தார்.
Twitter (PSG)
எம்பாப்பே கடைசி நிமிடத்தில் கோல்
இதற்கு Le Havre அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (90+1) PSG நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே மிரட்டலாக கோல் அடித்தார்.
Twitter (PSG)
இதன்மூலம் PSG அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் PSG அணியின் தரப்பில் 2 கோல்களும், Le Harve தரப்பில் ஒரு கோலும் ஆப்சைடு ஆனது குறிப்பிடத்தக்கது.
Twitter (PSG)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |