PSGயை விட்டு வெளியேற எம்பாப்பேயை வலியுறுத்திய மெஸ்ஸி? வெளியான செய்தியால் சலசலப்பு
லியோனல் மெஸ்ஸி தனது சக அணி வீரரான எம்பாப்பேயை PSGயை விட்டு வெளியேறுமாறு கூறியதாக வெளியான செய்தி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டர் மியாமி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் free agent ஆக அணியை விட்டு வெளியேறினார்.
அவரது இறுதி லீக் 1 ஆட்டத்தில் ரசிகர்கள் அவரை கேலி செய்த நிலையில், அவர் இன்டர் மியாமியில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், தனது சக அணி வீரரான கைலியன் எம்பாப்பேவை அணியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியதாகவும், பார்சிலோனா அல்லது ரியல் மாட்ரிட் அணியில் சேருமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஸ்பெயின் ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெஸ்ஸியின் விருப்பம் என வெளியான செய்தி
குறிப்பாக, 'நீங்கள் பார்காவிற்கு (பார்சிலோனா) செல்வதை நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் மாட்ரிட் செல்ல விரும்பினால், அதை செய்யுங்கள். உண்மையான வெற்றிகரமான திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர்' என்று மெஸ்ஸி கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, நான் கிளப்பில் (PSG) தொடர்வதையே விரும்புகிறேன் என்று முன்பே கூறியதாக எம்பாப்பே ட்வீட் செய்திருந்தார். ஆனால் தற்போது மெஸ்ஸி கூறியதாக வெளியாகியுள்ள செய்தி PSG ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
SK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |