எல்லாம் பொய் தான்! அதிரடியாக மறுத்த கைலியன் எம்பாப்பே
PSG வீரர் கைலியன் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு மாற உள்ளதாக வெளியான செய்தியை அவர் அதிரடியாக மறுத்துள்ளார்.
வெளியேறும் எம்பாப்பே
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (PSG) அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது ஒப்பந்தம் முடிவடைவதால் இன்டர் மியாமியில் இணைவதாக செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து மற்றொரு PSG கைலியன் எம்பாப்பேவும் தனது அணியை விட்டு இந்த கோடையில் நகர்வதாக தகவல் வெளியானது.
Getty Images
மேலும் அவர் ரியல் மாட்ரிட்டில் இணைவார் என்று கூறப்பட்டது. கடந்த கோடையில் அவரை கொண்டுவர தவறியதால், இந்த கோடையில் ஒப்பந்தம் செய்ய மாட்ரிட் புதிய முயற்சியை மேற்கொள்ளும் என Foot Mercato தெரிவித்தது.
எம்பாப்பே அதிரடி மறுப்பு
இந்நிலையில் கிளப் மாறுவதாக பரவும் தகவலை எம்பாப்பே அதிரடியாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பொய்கள்..அதே நேரத்தில் அது பெரிய விடயம். அவை கடந்து செல்கின்றன. நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கும் PSG அணியில் அடுத்த சீசனில் தொடர்வேன்' என கூறியுள்ளார்.
MENSONGES…❌
— Kylian Mbappé (@KMbappe) June 13, 2023
En même temps plus c’est gros plus ça passe. J’ai déjà dis que je vais continuer la saison prochaine au PSG où je suis très heureux. https://t.co/QTsoBQvZKU
எம்பாப்பேவின் இந்த பதிவினால் PSG மற்றும் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |