மெஸ்ஸியைப் போல் இன்னொருவர் சாத்தியமில்லை! ரொனால்டோவும் யோசனையில் இருந்தார்..மனம்திறந்த இங்கிலாந்து ஜாம்பவான்
லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதன் இணை உரிமையாளர் டேவிட் பெக்காம் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
இன்டர் மியாமி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் விளையாடி வந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி, இன்டர் மியாமி அணியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த அணியின் இணை உரிமையாளராக இங்கிலாந்தின் ஜாம்பவான் டேவிட் பெக்காம் உள்ளார். அவர் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ குறித்து மனம் திறந்துள்ளார்.
Getty Images
பெக்காம் கூறுகையில், 'மெஸ்ஸியைப் போல் இன்னொருவர் இருப்பது சாத்தியமில்லை. அவர் தனித்துவத்தால் தனியாக தெரியும் வீரராக உள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் போல் தன் அளவில் இல்லாதவர் அவர். எனினும் இருவரும் மற்றவர்களை விட மேலானவர்கள்' என தெரிவித்துள்ளார்.
Getty Images
கேலி செய்த பெக்காம்
மற்றொரு நேர்காணலில் அவர் கூறும்போது, UEFA சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மெஸ்ஸி தன்னைக் கடந்து ஓடியவுடன், கால்பந்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாக கேலி செய்த பெக்காம், பார்சிலோனா மற்றும் PSG இடையேயான போட்டியில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
AFP/Getty Images
'என் வயது இருந்தபோதிலும், நான் விளையாடுவதை விரும்பினேன். இரண்டு ஆட்டங்களிலும் அணி நன்றாக இருந்தது. நாங்கள் பெருமைப்பட வேண்டிய விடயங்களை செய்தோம். அவர்களிடம் நாங்கள் தோற்கவில்லை' என கூறினார்.
இன்டர் மியாமியில் லியோனல் மெஸ்ஸியின் நகர்வை கவனித்து வரும் பெக்காம், போர்த்துக்கல் நட்சத்திரம் ரொனால்டோவை கொண்டுவரும் யோசனையில் இருந்துள்ளார். ஆனால், அவர் மெஸ்ஸியை தெரிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP