நட்சத்திர வீரரை விற்கும் PSG! ரொனால்டோவை இழந்ததால் தயங்கும் யுனைடெட்
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி நட்சத்திர வீரர் நெய்மரை விற்க உள்ள நிலையில், அவரை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெய்மரை விற்கும் PSG
நட்சத்திர வீரர் நெய்மரை விற்க பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் நட்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரின் நிழலில் இருந்து தன்னை பிரிக்க விரும்பினார்.
அதன் விளைவாக, 2017ஆம் ஆண்டில் PSG அணிக்காக 222 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தமாகி உலக சாதனை படைத்தார்.
EPA-EFE Photo
அதன் பின்னர் தனது கிளப்பிற்காக 173 ஆட்டங்களில் 195 கோல்களுக்கு நேரடியாக பங்களித்துள்ளார். இந்த நிலையில் தான் நெய்மரை விற்க PSG விரும்புவதாக பல ஆதாரங்கள் பரிந்துரைத்துள்ளன.
செல்சி மற்றும் யுனைடெட் ஆர்வம்
நெய்மர் வெளியேறும்பட்சத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட செல்சி இதில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
premierleague
முன்னதாக, யுனைடெட் கிளப்பிக்கும் ரொனால்டோவுக்கு இடையே பிளவு ஏற்பட்டதால் அவர் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தார். எனவே, அப்படி ஒரு பெரிய நெருக்கடியை மீண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என கருதுவதால், யுனைடெட் அணி அதிக ஊதியம் பெறும் மற்றொரு வீரரை வாங்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
உண்மையில், ரொனால்டோவின் வெளியேற்றத்தால் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
Getty Images
Getty Images