PSG நட்சத்திரம் நெய்மரை இணைத்துக் கொள்ள முயற்சிக்கும் பிரபல கிளப்!
பிரபல கிளப் அணியான செல்சி பாரிஸ் செயிண்ட் ஜேர்மைனின் நட்சத்திர வீரர்களான நெய்மர் மற்றும் ஹக்கிமியை தங்கள் அணியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்தங்கிய செல்சி
2022-23 பிரீமியர் லீக் அட்டவணையில் செல்சி அணி எதிர்பாராத விதமாக 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தங்கள் அணியை வலுப்படுத்த கோடைகால வீரர்கள் பரிமாற்றத்தில் செல்சி இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, 2023-24 சீசனுக்கு தங்களை சிறப்பாக தயார்படுத்த பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் நட்சத்திர வீரர்களான நெய்மர் மற்றும் ஹக்கிமியை இணைத்துக் கொள்ள செல்சி ஆர்வமாக உள்ளது என Football insider கூறியுள்ளது.
Image: AP Photo/Francois Mori
செல்சிக்கு சாதகமாக PSG அணியும் ஒரு பெரிய கோடைகால மாற்றத்திற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியில் இருக்கும் ஒப்பந்தம்
இதற்கிடையில் நெய்மரின் தற்போதைய ஒப்பந்தம் சூன் 2025ஆம் ஆண்டில் முடிய உள்ளது. அவர் இந்த சீசனில் 29 ஆட்டங்களில் 35 கோல் ஈடுபாடுகளை பதிவு செய்திருந்தாலும், PSGயில் தனது பனியின் முடிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
மேலும், அதிக விலை கொடுக்கப்பட்டால் மட்டுமே நெய்மரை விடுவிக்கும் எண்ணத்தில் PSG உள்ளது. ஆனால், செல்சியின் கோடைகால வரவு செலவுத் திட்டம் FFP (Financial Fair Play) விதிகளால் கட்டுப்படுத்தப்படுவதால், விற்பனை மூலம் பரிமாற்ற நிதிகளை திரட்ட வேண்டிய நிலையில் உள்ளது.
Image: Jonathan Brady/empics/PA Wire/picture alliance