தன் வாழ்நாளில் அதிவேக கோல் அடித்த மெஸ்ஸி! வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அர்ஜென்டினா சார்பில் லியோனல் மெஸ்ஸி அதிவேக கோல் அடித்தார்.
மெஸ்ஸியின் அதிவேக கோல்
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் இருந்து வெளியேறிய பின்னர், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் லியோனல் மெஸ்ஸி இணைந்தார்.
இந்த நிலையில் தனது தேசிய அணியான அர்ஜென்டினாவில் நேற்று அவர் விளையாடினார். பெய்ஜிங்கில் நடந்த நட்புமுறை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
Lionel Messi scored the fastest goal of his career against Australia today ⚡️?
— SPORTbible (@sportbible) June 15, 2023
pic.twitter.com/hu5FjJee8C
இதில் போட்டி ஆரம்பித்த 2வது நிமிடத்திலேயே லியோனல் மெஸ்ஸி அற்புதமாக கோல் அடித்தார். இது அவரது கால்பந்து கேரியரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும். அதாவது போட்டி ஆரம்பித்து 79 வினாடிகளுக்குள் மெஸ்ஸி இந்த கோலை அடித்தார்.
அர்ஜென்டினா வெற்றி
அதனைத் தொடர்ந்து அர்ஜென்டினாவின் ஜேர்மான் பேஸ்ஸில்லா 68வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால் இறுதிவரை அவுஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாததால், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மெஸ்ஸி அடித்த இந்த விரைவான கோல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
AFP
Jia Haocheng/Xinhua/Alamy Live News/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |