தெறிக்கவிட்ட ஹாரிகேனின் கோல்! கிளப் உலகக்கிண்ணத்தில் மாஸ் வெற்றி (வீடியோ)
ஃபிபா கிளப் உலகக்கிண்ணப் போட்டியில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போக்கா ஜூனியர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹாரி கேன்
ஹார்ட் ராக் மைதானத்தில் நடந்த போட்டியில், பாயர்ன் முனிச் மற்றும் போக்கா ஜூனியர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் பாயர்ன் முனிச் (Bayern Munich) அணிக்கு கோல் கிடைத்தது. ஆனால், நடுவர் சோதித்த பின்னர் 'ஆப்சைடு' எனக் கூறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
எனினும், 18வது நிமிடத்தில் ஹாரி கேன் (Harry Kane) மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் முதல் பாதியில் பாயர்ன் முனிச் முன்னிலை வகித்தது.
பாயர்ன் முனிச் வெற்றி
இரண்டாம் பாதியின் 66வது நிமிடத்தில், பாதி மைதானத்தில் இருந்து தனியாளாக பந்தை கடத்திச் சென்ற மிக்கேல் மிரன்டியல் (Miguel Merentiel), பாயர்ன் முனிச்சின் தடுப்பை மீறி புயல்வேக கோல் அடித்தார்.
இதனால் பாயர்ன் அணிக்கு நெருக்கடி ஏற்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மைக்கேல் ஓலிசே (Michael Olise) அபார கோல் அடிக்க, அதுவே பாயர்ன் முனிச் அணியின் வெற்றிக்கான கோல் ஆக மாறியது.
இறுதியில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கணக்கில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |