ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - தமிழக வீரருக்கு அணியில் இடம்
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
செப்டம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
இதில், பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சூர்ய குமார் யாதவ் (அணித்தலைவர் ), சுப்மன் கில் (துணை அணித்தலைவர் ), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |