மகளிர் T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: BCCI வெளியிட்ட அறிக்கை
2024 ICC T20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை BCCI அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார் மற்றும் ஸ்மிருதி மந்தனா துணைத் தலைவராக இருப்பார்.
2024 ICC T20 உலகக் கோப்பை
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 அக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெறவுள்ளது.
A பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இவர்களது முதல் ஆட்டம் அக்டோபர் 4ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 இற்கான இந்திய அணியில், ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா (VC), ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (wk), யாஸ்திகா பாட்டியா (wk)*, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி , ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |