சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பரிசு அறிவித்த பிசிசிஐ: எத்தனை கோடி?
துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி சாம்பியன்
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மகிழ்ச்சியடைகிறது.
இந்த நிதி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் மற்றும் ஆண்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களை கௌரவிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வீரர்களுக்கு
பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உட்பட அணியில் உள்ள 15 வீரர்களுக்கு, தலா ரூ.3 கோடி என்ற விகிதத்தில் ரொக்கப்பரிசு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது.
அதேபோல் ஒவ்வொரு ஆதரவு ஊழியர்களுக்கும் தலா ரூ.50 லட்சமும், தலைமை தேர்வர் அஜித் அகர்கருக்கு ரூ.30 லட்சமும், ஏனைய 4 தேசிய தேர்வர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |