ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் லீக் - IPL க்கு போட்டியாக சவுதி அரேபியா திட்டம்
ரூ.4347 கோடியில் உலகளவிலான கிரிக்கெட் லீக்கை நடந்த சவுதி அரேபியா திட்டமிட்டு வருகிறது.
உலக கிரிக்கெட் லீக்
2008 ஆம் ஆண்டு பிசிசிஐ சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஓவர் IPL போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றது.
IPL க்கு கிடைத்த வரவேற்பையடுத்து, பல்வேறு நாட்டின் கிரிக்கெட் அமைப்புகள் 20 ஓவர் போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவும் ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதில், 8 அணிகள் இடம் பெரும் என கூறப்படுகிறது. டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போல் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் 4 இடங்களில் இந்த போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐ கட்டுப்பாடு
சவுதி அரேபியாவை சேர்ந்த SRJ நிறுவனம் இது தொடர்பாக ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், IPL தவிர்த்த பிற நாடுகளின் லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை நீக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சவுதி அரசாங்கம் உலகளாவிய விளையாட்டுகளில் தனது இருப்பை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது, LIV கோல்ஃப், ஃபார்முலா 1 ஆகியவற்றில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.
மேலும், 2034 FIFA உலகக் கோப்பையை நடத்தும் உரிமைகளைப் பெற்றுள்ளதோடு, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெறவும் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது பிரபலமாக உள்ள டி20 போட்டிகளை நடத்த முன்வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |