50 ஓவர் உலகக் கோப்பை போட்டி: கேரளாவை புறக்கணித்ததா பிசிசிஐ? பின்னணி என்ன?
இந்தியாவில் நடைபெற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்த திருவனந்தபுரம் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை போட்டி
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோம்பர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் போட்டி நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது.
அந்த அட்டவணையில் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மொத்தம் 10 மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதில், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் 46 நாட்கள் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
கேரளாவை புறக்கணிப்பு?
ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டிக்கு கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தேர்வு செய்யப்படவில்லை. இது கிரிக்கெட் கேரள ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. 10 நகரங்களை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. தென்னிந்தியா முழுவதையும் கவர் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |