ஐபிஎல் போட்டிகளை 94 ஆக அதிகரிக்க BCCI திட்டம் - புதிய அணிகள் இணைகிறதா?
ஐபிஎல் போட்டிகளை 74 இல் இருந்து 94 ஆக அதிகரிக்க BCCI திட்டமிட்டு வருகிறது.
ஐபிஎல் போட்டிகள்
பிசிசிஐ சார்பில் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட T20 லீக் போட்டியான IPL தொடர், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
2008 ஆம் ஆண்டுகள் ஐபிஎல் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது, 8 அணிகள் இருந்ததால், ஒரு ஐபிஎல் தொடருக்கு 60 போட்டிகள் நடத்தப்பட்டது.
கடந்த 2022 ஐபிஎல் தொடர், முதல் கூடுதலாக 2 அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 74 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை 94 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
94 போட்டிகள்
இது குறித்து பேசிய அவர், " 2028ஆம் ஆண்டு வரவுள்ள அடுத்த ஊடக உரிமைச் சுழற்சியில் இருந்து, லீக்கை 94 போட்டிகள் கொண்டதாக விரிவுபடுத்துவது தொடர்பாக பிசிசிஐ தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதில், ஒவ்வொரு அணியும், எதிரணியுடன் முழுமையாக சொந்த மைதானத்தில் ஒரு போட்டியும், எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாடும் வகையில், போட்டி அட்டவணையை விரிவுப்படுத்தப்படும்.
இதனால், போட்டி நடைபெறும் நாட்களும் அதிகரிக்கும். இரு நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் ஐசிசி தொடர் இல்லாத காலத்தில், போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஐசிசியிடம் ஆலோசித்து வருகிறோம்.
அதேவேளையில், அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாக உள்ளது. எனினும், இது குறித்து அப்போதைக்கு முடிவு எடுக்கப்படும்.
இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை கோப்பையை வெல்லாத அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |