ஒலிம்பிக் போட்டியில் களம் காணும் இந்திய வீரர்களுக்கு ரூ.8.5 கோடி நிதியுதவி - BCCI அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிதியுதவி வழங்கும் BCCI
ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த பாரிஸ் ஒலிம்பிக் ஜூலை 26 அன்று ஆரம்பமாவிருக்கிறது.
உலகளாவிய நிகழ்வானது ஆகஸ்ட் 11 வரை பிரான்சின் தலைநகரில் (பாரிஸ்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் 16 விளையாட்டுகளில் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
அம்பானி குடும்பத்தின் கார் ஒட்டுநர் சம்பளம் எவ்வளவு? - உயர் அதிகாரிகள் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகம்!
இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு உதவி வழங்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிதியுதவி ரூ.8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
I am proud to announce that the @BCCI will be supporting our incredible athletes representing #India at the 2024 Paris Olympics. We are providing INR 8.5 Crores to the IOA for the campaign.
— Jay Shah (@JayShah) July 21, 2024
To our entire contingent, we wish you the very best. Make India proud! Jai Hind! ??…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |